நாமக்கல்லில் 119 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


நாமக்கல்லில் 119 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x
நாமக்கல்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் மற்றும் திறன் செல்போன்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் உமா தலைமை தாங்கினார். சின்ராஜ் எம்.பி., ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. கலந்து கொண்டு, 20 மாற்றுத்திறனானிகளுக்கு ரூ.21 லட்சம் மதிப்பில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், 49 மாற்றுத்திறனானிகளுக்கு தலா ரூ.83 ஆயிரம் வீதம் ரூ.40.91 லட்சம் மதிப்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், 50 மாற்றுத்திறனானிகளுக்கு தலா ரூ.13,500 வீதம் ரூ.6.75 லட்சம் மதிப்பில் பார்வையற்றோர் மற்றும் செவித்திறன் குறைபாடுடையோருக்கான திறன் செல்போன்கள் என மொத்தம் 119 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.68.66 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர், தமிழ்நாடு அரசின் திட்டங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு கொண்டு சேர்ப்பதில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்களும் அனைத்து வகையிலும் உறுதுணையாக இருப்போம் என்றும், என்னுடைய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தும் நான் ஏறத்தாழ 60 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்குவதற்கான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்திருக்கிறேன் என்றும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்ரமணியன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொறுப்பு) சந்திரமோகன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முடக்கு தொழில்நுட்பாளர் குருபிரகாசம் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story