5 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
முதல்வரின் முகவரித்துறை சிறப்பு குறைதீர்க்கும் முகாம் 5 பேருக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் லலிதா வழங்கினார்
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதல்வரின் முகவரித்துறை சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது. முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர்கள் மனுக்களை பெற்றனர். தொடர்ந்து முகாமில் பெறப்பட்ட மனுவிற்கு உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான ஆணைகளை மாவட்ட கலெக்டர் லலிதா வழங்கினார். முகாமில் தீர்வு காணப்பட்ட 5 பயனாளிகளுக்கு ரூ.52 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இதில் சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் கண்மணி மற்றும் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர்கள் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story