7 பேருக்கு நலத்திட்ட உதவிகள்


7 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
x

நெல்லை தாலுகாவில் ஜமாபந்தி: 7 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், திசையன்விளை, மானூர், சேரன்மாதேவி, அம்பை ஆகிய 8 தாலுகா அலுவலகங்களிலும் கடந்த 3-ந் தேதி வருவாய் தீர்வாயம் எனும் ஜமாபந்தி தொடங்கியது. நெல்லை தாலுகா ஜமாபந்தி அலுவலராக கலெக்டர் விஷ்ணு இருந்தார். இவர் நேற்று 2-வது நாளாக நெல்லை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடத்தினார். இதில் வேளார்குளம், வெட்டுவான்குளம், நாரணம்மாள்புரம், அனந்த கிருஷ்ணபுரம், தச்சநல்லூர், சத்திரம் புதுக்குளம், அபிஷேகபட்டி, ராைமயன்பட்டி, ராஜவல்லிபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஜமாபந்தியில் 7 பேருக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை மற்றும் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நில அளவை துறை உதவி இயக்குனர் வாசுதேவன், சிரஸ்தார் வெங்கடாசலம், நெல்லை தாசில்தார் சண்முகசுப்பிரமணியன், தேர்தல் தாசில்தார் கந்தப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story