மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

திருவாரூர்

திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளிடமிருந்து அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் குறித்த கோரிக்கை மனுக்களை பெற்று தகுதியான மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்து வருகிறது. அதன்படி நேற்று திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா தலைமை தாங்கினார்.இதில் திருவாரூர், நன்னிலம், குடவாசல், கூத்தாநல்லூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கை மனுக்களை எழுத்து பூர்வமாக கொடுத்தனர்.

நலத்திட்ட உதவிகள்

உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வங்கிகடன், மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் ஆகியவை கேட்டு 19 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்று கொண்ட வருவாய் கோட்டாட்சியர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். முன்னதாக மாற்றுத்திறனாளி ஒருவருக்கு சக்கர நாற்காலியும், மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் சார்பில் இயற்கை மரணம் அடைந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.17 ஆயிரத்தை தலா 8 பேருக்கு வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா வழங்கினார். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா மற்றும் குடவாசல், நன்னிலம், திருவாரூர், கூத்தாநல்லூர் தாசில்தார்கள் கலந்து கொண்டனர்.


Next Story