சிலம்பிநாதன்பேட்டையில் நடந்தமனுநீதி நாள் முகாமில் ரூ.2 கோடியில் நலத்திட்ட உதவிகள்


சிலம்பிநாதன்பேட்டையில் நடந்தமனுநீதி நாள் முகாமில் ரூ.2 கோடியில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 7 Feb 2023 12:15 AM IST (Updated: 7 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிலம்பிநாதன்பேட்டையில் நடந்த மனுநீதி நாள் முகாமில் ரூ.2 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கடலூர்

பண்ருட்டி,

பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிலம்பிநாதன் பேட்டையில் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது. இதற்கு கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். முகாமில், பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 14 லட்சத்து 11 ஆயிரத்து 384 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாலசுப்பிரமணியம், சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.இதில் 176 பேருக்கு இலவச வீட்டு மனைகளும், 49 பேருக்கு பட்டா மாற்ற உத்தரவும், 60 பேருக்கு சமூக பாதுகாப்பு திட்ட உதவிகளும், 12 பேருக்கு புதிய குடும்ப அட்டைகளும், 2 மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூ.2 லட்சம் கடன் உதவி ஆணை உள்பட 356 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

விழாவில், பண்ருட்டி ஒன்றிய குழு தலைவர் சபா.பாலமுருகன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story