மனுநீதி நாள் முகாமில் ரூ.1¾ கோடியில் நலத்திட்ட உதவி
மனுநீதி நாள் முகாமில் ரூ.1¾ கோடியில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.
காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் பன்னியூர், புதுப்பட்டு மற்றும் ஆலப்பாக்கம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கி புதுப்பட்டு கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடந்தது. சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம் முன்னிலை வகித்தார். கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி 269 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 89 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து 154 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 116 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 22 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 16 மனுக்கள் பரிசீலனைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மனுநீதி நாள் முகாமில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் துறை, கால்நடைத்துறை, ஆகிய துறைகள் சார்பாக வைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கை கலெக்டர் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா, ஒன்றியக் குழுத் தலைவர் அனிதாகுப்புசாமி, துணை கலெக்டர்கள் தாரகேஸ்வரி, சத்யபிரசாத், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முரளி, வேளாண்மை இணை இயக்குநர் வடமலை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன், மாவட்ட சமூக நல அலுவலர் இந்திரா, முன்னோடி வங்கி மேலாளர் அலியம்மா ஆபிரஹாம், தாசில்தார்கள் சுமதி, ஆனந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சையூப்புதின், தண்டாயுதபாணி, ஒன்றியக் குழு உறுப்பினர் கோமதி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் சுந்தரம் (புதுப்பாடி), லட்சுமி (பன்னியூர்) மரியாபிரகாசி கிருஷ்ணன் (ஆலப்பாக்கம்) மற்றும் அனைத்து துறைச்சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.