4 பேருக்கு ரூ.1½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்


4 பேருக்கு ரூ.1½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
x

சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழாவில் 4 பேருக்கு ரூ.1½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் தலைமை தாங்கினார். மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர் தமீம் அன்சாரி முன்னிலை வகித்தார். இதில். பூண்டி.கே.கலைவாணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 26 பேருக்கு ரூ.1 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பிலான இலவச தையல் எந்திரம், இஸ்திரி பெட்டி, திருமண உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பாலசந்திரன், மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் கவுரவ செயலாளர் சகாபுதீன், மாவட்ட கிறிஸ்தவமகளிர் உதவும் சங்க செயலாளர் நத்தானியல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story