1,500 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் 1,500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சாயல்குடி,
அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் 1,500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நலத்திட்ட உதவிகள்
சாயல்குடி மற்றும் கடலாடி பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கருணாநிதி நினைவு தினத்தையொட்டி முதுகுளத்தூர் தொகுதியில் 1,500 பேருக்கு அரிசி மற்றும் 12 வகையான பலசரக்கு பொருட்கள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராம வளர்ச்சி நல வாரியத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சரவணன் தலைமை தாங்கினார். சாயல்குடி தி.மு.க. பேரூர் செயலாளர் வெங்கடேஷ்ராஜ், சாயல்குடி நீர்பாசன சங்கத் தலைவர் ராஜாராம், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தமிழ்ச்செழியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் அருள் பால்ராஜ், சாயல்குடி நகர் இளைஞர் அணி செயலாளர் விக்னேஷ் ராம், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சாயல்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், சாயல்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம்முகைதீன் ஆகியோர் அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் நகர தி.மு.க. துணைச் செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் ஒன்றிய பிரதிநிதி நாகேந்திரன், ஓரிவயல் சண்முகம், குருசாமி, பழனிக்குமார் இளைஞர் அணி முனீஸ்வரன் முத்துக்குமரன், முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலர்கள் சத்தியேந்திரன், டோனி சார்லஸ், ரஞ்சித் மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சாயல்குடி
இதே போல் சாயல்குடி பேரூராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். துணை தலைவர் மணிமேகலை பாக்கியராஜ், செயல் அலுவலர் சேகர், இளநிலை உதவியாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நலத்திட்ட உதவிகளை சாயல்குடி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெயபாலன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் காமராஜ், ஆபிதா அனிபா அண்ணா, அழகர்வேல் பாண்டியன், குமரையா, தி.மு.க. மாவட்ட பிரதிநிதி புனித ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதே போல் கடலாடி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கடலாடி தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் ஆப்பனூர் ஆறுமுகவேல் தலைமை தாங்கி தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏ.புனவாசல் ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், கீழக்கிடாரம் ஊராட்சி தலைவர் மீனாள் தங்கையா, கடலாடி நகர் செயலாளர் ராமசாமி, இளைஞர் அணி மாரிநாதன், முதுவை முருகன், பாலச்சந்தர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.