162 பேருக்கு ரூ.13¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்


162 பேருக்கு ரூ.13¾ லட்சத்தில்  நலத்திட்ட உதவிகள்
x

வண்டலில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் 162 பேருக்கு ரூ.13¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

வண்டலில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் 162 பேருக்கு ரூ.13¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்.

மக்கள் நேர்காணல் முகாம்

தலைஞாயிறு அருகே வண்டல் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். தலைஞாயிறு பேரூராட்சி தலைவர் செந்தமிழ்செல்வி பிச்சையன் வரவேற்றார். முகாமில் 162 பயனாளிகளுக்கு ரூ.13 லட்சத்து 91 ஆயிரத்து 860 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ரூ.6 லட்சத்தில் கழிவறை

தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த முகாமின் நோக்கம் அரசின் நலத்திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதாகும். தலைஞாயிறு, அவரிக்காடு, வண்டல் ஆகிய ஊராட்சி ஒன்றியதொடக்கப்பள்ளியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கழிவறை கட்ட ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி சுற்றுச்சுவர்

அவரிக்காடு, வண்டல் ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா,தலைஞாயிறு ஆத்மா வட்டார குழுத்தலைவர் மகாகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன், தாசில்தார் ஜெயசீலன், துணை தாசில்தார் வேதையன், வருவாய் ஆய்வாளர் பிரேம்நாத், பேரூராட்சி கவுன்சிலர்கள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.


Next Story