மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 2 பேருக்கு நலத்திட்ட உதவி


மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 2 பேருக்கு நலத்திட்ட உதவி
x

நாகர்கோவிலில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 2 பேருக்கு நலத்திட்ட உதவி

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கினார். அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 198 பேர் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.

அந்த கோரிக்கை மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள துறைசார்ந்த அதிகாரிகளுக்கு கலெக்டர் ஸ்ரீதர் அறிவுறுத்தினார். பின்னர் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் எந்திரத்தை கலெக்டர் வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருப்பதி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி சுப்பையா மற்றும் அனைத்துத்துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story