20 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


20 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 2 Nov 2022 12:15 AM IST (Updated: 2 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

உச்சிநத்தத்தில் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் 20 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார்.

ராமநாதபுரம்

சாயல்குடி,

உச்சிநத்தத்தில் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் 20 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார்.

சிறப்பு கிராம சபை கூட்டம்

கடலாடி ஊராட்சி உச்சிநத்தம் கிராமத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ராமநாதபுரம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். உச்சநத்தம் ஊராட்சி தலைவர் பாமா முன்னிலை வகித்தார். பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு கலெக்டர் பேசியதாவது:-

உள்ளாட்சிகள் தினத்தையொட்டி மாவட்டத்தில் 429 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது. இதன் நோக்கம் ஊராட்சி நல்ல வளர்ச்சி பெற வேண்டும் என்பதே ஆகும். இங்கு பொதுமக்கள் தங்கள் பகுதியில் சாலை வசதியை மேம்படுத்துதல், கூடுதல் பஸ் வசதிகளை அமைத்துக் கொடுத்தல், இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் போதிய கழிப்பறை வசதிகள் மற்றும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைத்துக் கொடுக்க கோரிக்கை விடுத்து இருக்கிறீர்கள். கள ஆய்வு செய்து விரைவில் நிறைவேற்றப்படும்.அரசு மேல்நிலைப்பள்ளியில் நடப்பு நிதியாண்டிலேயே கழிப்பறை கட்டிடங்கள் விரைவாக கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றும் வண்ணம் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் கிராம நிர்வாக அலுவலர் முகாமிட்டு பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று அதற்குரிய தீர்வு கிடைத்திட பணி மேற்கொள்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

நலத்திட்ட உதவிகள்

இதை தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் பாரத பிரதம மந்திரி குடியிருப்புதிட்டம் 15-வது நிதிக்குழு திட்டம், தேசிய வேளாண் திட்டம் மற்றும் மகளிர் குழுக்களுக்கு நேரடி கடன் வழங்குதல் திட்டம் என 15 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், 5 பயனாளிகளுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் ஒரு மாதத்திற்கான மருந்து மாத்திரைகளை கொண்ட தொகுப்பையும் கலெக்டர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பிரதாப், கடலாடி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சரவணன், கடலாடி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, கடலாடி தாசில்தார் முருகவேல், முன்னாள் உச்சிநத்தம் ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து ெகாண்டனர்.


Related Tags :
Next Story