நலவாரியங்கள் மூலம் இதுவரை 3¾ லட்சம் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்


நலவாரியங்கள் மூலம் இதுவரை 3¾ லட்சம் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 25 Jun 2023 12:15 AM IST (Updated: 25 Jun 2023 5:22 PM IST)
t-max-icont-min-icon

கடந்த மே மாதத்தில் மட்டும் 5,306 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 31 லட்சத்து 36 ஆயிரத்து 250 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

நாமக்கல்

நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தின் கீழ் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர்கள் நலவாரியம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த கண்காணிப்புக்குழு கூட்டம் கலெக்டர் உமா தலைமையில் நடந்தது.

இதில் நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஜெயலட்சுமி, தொழிற்சங்க பிரதிநிதிகள், நிர்வாக பிரதிநிதிகள் மற்றும் அரசு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானம், அமைப்புசாரா மற்றும் ஓட்டுனர்கள் நல வாரியங்களில் இதுவரை 3 லட்சத்து 75 ஆயிரத்து 708 பயனாளிகளுக்கு ரூ.195 கோடியே 62 லட்சத்து 47 ஆயிரத்து 812 நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது. கடந்த மே மாதத்தில் மட்டும் 5,306 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 31 லட்சத்து 36 ஆயிரத்து 250 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

மேலும் வீட்டுவசதி திட்டம் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளிக்கு ரூ.4 லட்சம் வழங்குவது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


Next Story