300 பேருக்கு நலத்திட்ட உதவி


300 பேருக்கு நலத்திட்ட உதவி
x

300 பேருக்கு நலத்திட்ட உதவிகளை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

விருதுநகர்

ராஜபாளையம்

ராஜபாளையம் தொகுதியில் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் 300 பேருக்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 8,9,10, மாத ஊதியத்தில் ரூ. 3 லட்சத்து 15 ஆயிரத்தை நலத்திட்ட உதவியாக தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், ராஜபாளையம் தொகுதியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு வரும் மாதம் முழுவதும் ரூ. 50 லட்சம் செலவில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. மேலும் தமிழக மக்களுக்காகவும், வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உழைத்து கொண்டிருக்கிறார். சட்டமன்ற உறுப்பினர் மாத ஊதியத்திலிருந்து தொகுதியில் உயர்கல்வி பயில இருக்கும் ஏழை, எளிய மாணவ, மாணவிகளில் அந்த பகுதியிலுள்ள கிளைச்செயலாளர், வார்டு செயலாளர்கள், ஒன்றிய, நகர செயலாளர்களின் பரிந்துரையின்படி 25 மாணவ மாணவிகளை தேர்வு செய்து கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு அவர்களின் படிப்பு செலவை முழுவதுமாக ஏற்றுக் கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story