303 பேருக்கு நலத்திட்ட உதவிகள்


303 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
x

இருக்கூரில் 303 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா வழங்கினார்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

நலத்திட்ட உதவிகள்

பரமத்திவேலூர் தாலுகா, இருக்கூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.4.33 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், ரூ.53.90 லட்சம் மதிப்பீட்டில் 4 புதிய திட்டப் பணிகளுக்கு நிர்வாக அனுமதியையும் மாவட்ட கலெக்டர் உமா வழங்கினார். நிகழ்ச்சிக்கு பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர் முன்னிலை வகித்தார்.

இம்முகாமில், வருவாய் துறையின் சார்பில் ரூ.4.98 லட்சம் மதிப்பில் 84 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், தலா ரூ.12 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பில் 28 பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதிய தொகையும், வேளாண்மைத்துறையின் சார்பில் ரூ.7 ஆயிரத்து 300 மதிப்பில் 11 விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்களும், கூட்டுறவுத்துறையின் சார்பில் ரூ.2.38 லட்சம் மதிப்பில் 17 பயனாளிகளுக்கு பயிர் கடனுதவியும் வழங்கினார்.

கலெக்டர் வழங்கினார்

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.60 கோடி மதிப்பில் 52 பயனாளிகள் மருத்துவ சிகிச்சைகள் பெறுவதற்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகளையும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் ரூ.1.58 லட்சம் மதிப்பில் 3 பயனாளிகளுக்கு கல்வி உதவித் தொகை என மொத்தம் 303 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினர்.

அதைத்தொடர்ந்து அரசு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் ரவி, ஊராட்சி மன்றத்தலைவர் ஜானகி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) பிரபாகரன், மகளிர் திட்ட இயக்குனர் பிரியா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) நடராஜன், வேளாண்மைத்துறை (இணை இயக்குனர்) துரைசாமி, மாவட்ட மேலாளர் தாட்கோ ராமசாமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஸ்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story