414 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 414 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.
செஞ்சி:
செஞ்சி ஊராட்சி ஒன்றியம் போத்துவாய் ஊராட்சியில் தமிழக அரசின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். திண்டிவனம் உதவி கலெக்டர் அமித், செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செஞ்சி தாசில்தார் நெகருன்னிசா வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு 414 பயனாளிகளுக்கு ரூ.71 லட்சத்து 29 ஆயிரத்து 776 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் விசுவநாதன், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கேசவலு, வேங்கடசுப்பிரமணியன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அலெக்சாண்டர், துணை தாசில்தார் செல்வமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் பச்சையப்பன், பூங்காவனம் ராமசாமி, ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாயகி குபேரன், துணைத் தலைவர் முருகன், பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலை செல்வகுமார், வருவாய் ஆய்வாளர் பழனி, கிராம நிர்வாக அலுவலர் சம்பத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் வேளாண்மை, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.