மனுநீதிநாள் முகாமில் 44 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
மனுநீதிநாள் முகாமில் 44 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
வேலூர்
கே.வி.குப்பத்தை அடுத்த சோழமூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது. தாசில்தார் அ.கீதா, ஒன்றியக் குழு தலைவர் லோ.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 89 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 44 மனுக்கள் ஏற்கப்பட்டது. 53 மனுக்கள் பரிசீலணையில் வைக்கப்பட்டது.
சலவைப் பெட்டி, தையல் எந்திரம், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் 44 பயனாளிகளுக்கு வருவாய் கோட்டாட்சியர் சா.தனஞ்செயன் வழங்கிப் பேசினார். கிராம நிர்வாக அலுவலர் குமரன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story