51 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


51 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x

திருப்பத்தூரில் நடந்த மக்கள் குறைதீர்வுநாள் கூட்டத்தில் 51 பயனாளிகளுக்கு, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருப்பத்தூர்

மக்கள் குறைதீர்வுநாள் கூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் பட்டாமாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், கிராம பொதுப்பிரச்சினைகள், குடிநீர் வசதி மற்றும் பொதுநலன் குறித்து மனுக்கள் அளித்தனர். மொத்தம் 386 மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவி

அதைத்தொடர்ந்து கடந்த வாரம் பெறப்பட்ட 413 மனுக்களில் 211 மனுக்களுக்கு தீர்வுகாணப்பட்டது. அதனடிப்படையில் 6 பேகுக்கு இ-பட்டாக்கள், 8 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 3 மாற்றுத்திறனாளிக்கு ரூ.78 ஆயிரம் மதிப்பில் உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகள், 7 நபர்களுக்கு ரூ.1,57,500 மதிப்பில் இயற்கை மரண உதவித்தொகை, 10 நபர்களுக்கு குடும்ப அட்டைகள் என மொத்தம் 51 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட சமூக நல அலுவலர் ஸ்டெல்லா, உதவி இயக்குனர்கள் (ஊராட்சிகள்) விஜயகுமாரி, (நிலஅளவை) செந்தில்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story