76 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


76 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x

மனுநீதிநாள் முகாமில் 76 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தாலுகா நரசிங்கபுரம் ஊராட்சி கல்லரப்பட்டி கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

ஆலங்காயம் ஒன்றியக்குழு தலைவர் சங்கீதா பாரி தலைமை தாங்கினார். முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் 76 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி வழங்கினார்.

முகாமில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, கலால் உதவி ஆணையர் பானு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரஸ்வதி, வட்டாட்சியர் சம்பத், ஆலங்காயம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் பூபாலன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் என்.விநாயகம், சிவக்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story