90 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


90 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x

பெரணம்பாக்கத்தில் 90 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தனித்துணை கலெக்டர் வழங்கினார்

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு தாலுகா பெரணம்பாக்கம் கிராமத்தில் மனு நீதி நாள் முகாம் நடந்தது.

சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் குமரவேல், வேளாண்மை உதவி இயக்குனர் நாராயணமூர்த்தி, ஒன்றியக் குழுதுணைத் தலைவர் முருகையன், மாவட்ட அட்மா குழு உறுப்பினர் எழில்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தேவிகாபுரம், பிர்கா வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக செய்யாறு சிப்காட் தனித்துணை கலெக்டர் நாராயணன், சேத்துப்பட்டு ஒன்றியக் குழு தலைவர் ராணி அர்ஜுனன் ஆகியோர் கலந்து கொண்டு முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு ஓய்வூதியம், புதிய குடும்ப அட்டை, விதவை ஓய்வூதியம், பட்டா உட்பிரிவு, நத்தம் பட்டா, முதியோர் உதவித் தொகை, இயற்கை மரணம் ஈமச்சடங்கு உதவித்தொகை, விவசாயிகளுக்கு விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் என 90 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

முடிவில் கிராம நிர்வாக அலுவலர் ரகுராமன் நன்றி கூறினார்.


Next Story