93 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
முதுகுளத்தூர் அருகே மக்கள் தொடர்பு முகாமில் 93 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் அருகே மக்கள் தொடர்பு முகாமில் 93 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மக்கள் தொடர்பு திட்ட முகாம்
முதுகுளத்தூர் அருகே உள்ள விளங்குளத்தூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜுலு தலைமை தாங்கினார். மாவட்ட தனி துணை தாசில்தார் சமூக பாதுகாப்பு திட்டம் மாரீஸ்வரி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அன்னம்மாள், முதுகுளத்தூர் தாசில்தார் சிவக்குமார் ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விளங்குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கனகவல்லி முத்துவேல் அனைவரையும் வரவேற்றார்.
முகாமில் பட்டா மாறுதல் 13 பேருக்கும், இலவச வீட்டு மனை பட்டா 22 பேருக்கும், முதியோர் உதவித்தொகை 26 பேருக்கும், திருமண உதவித்தொகை 2 பேருக்கும், விதவைகள் உதவித்தொகை ஒருவருக்கும், குடும்ப அட்டை 10 பேருக்கும், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2 பேருக்கும், வேளாண்மை துறை சார்பில் உரம் மற்றும் விவசாய இடுப்பொருட்கள் 5 பேருக்கும், விலையில்லா தையல் எந்திரம் 5 பேருக்கும், விலையில்லா சலவைப் பெட்டி 5 பேருக்கும், மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் ஒருவருக்கும் திறன்பேசி ஒருவருக்கும் உள்ளிட்ட 93 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 54 ஆயிரத்து 523 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
164 மனுக்கள் பெறப்பட்டன
மேலும் 164 பயனாளிகளிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்திற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கேசவராமன், ஆதிதிராவிட நலத்துறை தாசில்தார் தென்னரசு, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஜெயக்குமார், கால்நடை மருத்துவர் சுந்தரமூர்த்தி, முதுகுளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசன்,மண்டல துணை வட்டாட்சியர்கள் முருகேஷ், சங்கர், வட்ட வழங்கல் அலுவலர் கதிரவன், வருவாய் ஆய்வாளர்கள் சேது மாணிக்கம், பெரியசாமி, சிங்கமுத்து, கீழத்தூவல் அரசு ஆரம்ப சுகாதார டாக்டர் நெப்போலியன், கிராம நிர்வாக அலுவலர் கருணாகரன், விளங்குளத்தூர் கூட்டுறவு சங்கத் தலைவர் முத்துவேல், ஊட்டச்சத்து மேற்பார்வையாளர் சண்முகசுந்தரி, வெங்கல குறிச்சி ராஜசேகர் மருத்துவ மேற்பார்வையாளர்கள் நேதாஜி உட்பட அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.