பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


பயனாளிகளுக்கு  நலத்திட்ட உதவிகள்
x

மயிலாடுதுறையில் நடந்த சுதந்திர தினவிழாவில் பயனாளிகளுக்கு ரூ.25 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் லலிதா வழங்கினார்.

மயிலாடுதுறை
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதையொட்டி இந்த ஆண்டு வீடுகள்தோறும் தேசிய கொடியேற்றி அமுது பெருவிழாவாக கொண்டாட மத்திய, மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்தன.அதன்படி அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வீடுகள்தோறும் தேசிய கொடியேற்றி நேற்று சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறை சாய் விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திரதின விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா முன்னிலை வைத்தார்.

அணிவகுப்பு மரியாதை

அதனைத்தொடர்ந்து கலெக்டர் லலிதா திறந்த ஜீப்பில் நின்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் பல்வேறு துறைகளின் சார்பில் 128 பயனாளிகளுக்கு ரூ.25 லட்சத்து 26 ஆயிரத்து 206 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனையடுத்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 69 பேருக்கும், காவல்துறை சார்பில் சிறப்பாக பணியாற்றிய 20 போலீசாருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

கலைநிகழ்ச்சிகள்

விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குனர் முருகண்ணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி உமாமகேஸ்வரி, உதவி கலெக்டர்கள் யுரேகா (மயிலாடுதுறை), அர்ச்சனா (சீர்காழி), மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, இணை இயக்குனர்(வேளாண்மை) சேகர், துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Next Story