சோளிங்கரில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
சோளிங்கர் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் காந்தி வழங்கினார்.
ராணிப்பேட்டை
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு 150 தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடை, ஏழை எளிய மக்களுக்கு அரிசி, சேலை, கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகராட்சித் துணைத் தலைவர் பழனி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் பரந்தாமன் முன்னிலை வகித்தார். துப்புரவு ஆய்வாளர் வடிவேல், இளநிலை உதவியாளர் எபினேசன், ஜெயராமன் ஆகியோர் வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, ஜெகத்ரட்சகன் எம்.பி., மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு 150 தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கினர். ஏழை எளிய மக்கள் 300 பேருக்கு 5 கிலோ அரிசி மற்றும் சேலை வழங்கினர்.
Related Tags :
Next Story