தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி


தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
x

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித் தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 240 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பட்டதாரி மற்றும் பட்டதாரி அல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு 4 வகையான திருமண உதவித்தொகைக்கான காசோலைகள் மற்றும் என்.எஸ்.சி பத்திரங்களையும், வருவாய் துறை சார்பாக 6 பயனாளிகளுக்கு வரன்முறை பட்டாக்களையும், உணவு பாதுகாப்புத் துறை சார்பாக உணவகங்கள், தேநீர் கடைகளில் உணவு பதார்தங்களை அச்சிடப்பட்ட தாள்களில் பொட்டலமிடுவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு குறும்படம் உருவாக்கியவர்களுக்கு பாராட்டு சான்றிதழையும் கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் மாவட்டவருவாய் அலுவலர் கண்ணபிரான், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வெ.சரவணன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) வீரபத்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன், சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story