முன்னாள் படைவீரர்களுக்கு நலத்திட்ட உதவிகள்


முன்னாள் படைவீரர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 21 Sep 2023 7:45 PM GMT (Updated: 21 Sep 2023 7:45 PM GMT)

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கி, முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரிடம் குறைகள் கேட்டார். அப்போது கடன்உதவி, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, திருமண உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 60 பேர் மனு கொடுத்தனர்.

அந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேருக்கு திருமண உதவித்தொகையாக ரூ.75 ஆயிரம், 13 பேருக்கு தொகுப்புநிதி கல்வி உதவித்தொகையாக ரூ.2 ½ லட்சம், ஒருவருக்கு சைனிக் பள்ளியில் படிக்க ஊக்கத்தொகையாக ரூ.25 ஆயிரம், ஒருவருக்கு வங்கிக்கடன் வட்டி மானியமாக ரூ.6,227 என மொத்தம் 18 பேருக்கு ரூ.3 லட்சத்து 56 ஆயிரத்து 227 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இதில் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் சுகுனா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story