பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
இட்டமொழி:
பாளையங்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் நெசவாளர் காலனி சமுதாயக்கூடத்தில் மக்களை தேடி சட்டமன்ற உறுப்பினர் நிகழ்ச்சி நடைபெற்றது. நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றார். மேலும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
ரூபி மனோகரன் டிரஸ்ட் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலவச கண் பரிசோதனை முகாமை தொடங்கி வைத்தார். அங்கு 25 வீடுகளுக்கு மேலாக செல்லும் மின்வயர்களை மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை மின்வாரிய உயர் அதிகாரிகளிடம் பேசி அகற்றுவதாக தெரிவித்தார். பின்னர் பொதுமக்களுடன் அமர்ந்து மதிய உணவு அருந்தினார்.
நிகழ்ச்சியில் நொச்சிக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் வேலம்மாள் சீனிவாசன், துணைத்தலைவர் கண்ணன், காங்கிரஸ் நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, வட்டார தலைவர்கள் கனகராஜ், நளன், சங்கரபாண்டியன், நிர்வாகி முத்துகென்னடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.