முதியோர்களுக்கு நல உதவி
செங்கோட்டையில் முதியோர்களுக்கு நல உதவி வழங்கப்பட்டது
செங்கோட்டை:
செங்கோட்டை பவ்டா நிறுவன அலுவலக வளாகத்தில் வைத்து உலக முதியோர் தினம் மற்றும் பவ்டா நிறுவன தினத்தை முன்னிட்டு ஆதரவற்ற முதிேயார்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி தலைமை தாங்கினார். துணைப்பொது மேலாளா் ஆர்தர் ஷ்யாம், முதுநிலை மேலாளா் லிவிங்ஸ்டன் விமல் ஆகியோர் முன்னிலை வகித்தனா். கள ஆய்வாளா் ரமேஷ் அனைவரையும் வரவேற்று பேசினார். அதனை தொடா்ந்து நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி ஆதரவற்ற முதியோர்கள் 25 பேருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், சீனி, தேயிலை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆதரவற்ற முதியோர்கள் கலந்து கொண்டு நல உதவி பைகளை வாங்கி சென்றனா். இதற்கான ஏற்பாடுகளை பவ்டா பணியாளா்கள் ராதா, அருணாசலம், பிரியா மற்றும் பணியாளா்கள் செய்திருந்தனா்.
முடிவில் களஆய்வாளா் பிரேமா நன்றி கூறினார்.