பொத்தகாலன்விளையில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்
பொத்தகாலன்விளையில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. வழங்கினார்.
தட்டார்மடம்:
தட்டார்மடம் அருகே பொத்தகாலன்விளையில் காமராஜர் பிறந்த நாள் விழாவையொட்டி, காங்கிரஸ் கட்சி சார்பில், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. வட்டார காங்கிரஸ் தலைவர் லூர்துமணி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் சங்கர், சிங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. ஏழைகளுக்கு தையல் எந்திரங்கள், கிரைண்டர்கள், இஸ்திரி பெட்டிகள், வேட்டி, சேலைகள், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, விளையாட்டு ஊக்க பரிசு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.
சாத்தான்குளம் யூனியன் தலைவர் ஜெயபதி, சாஸ்தாவிநல்லூர் பஞ்சாயத்து தலைவர் திருக்கல்யாணி, மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் எடிசன், துணைத்தலைவர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாத்தான்குளம் பகுதியில் நீராதாரத்தை மேம்படுத்த வலியுறுத்தி, சாஸ்தாவிநல்லூர் விவசாய அபிவிருத்தி சங்க தலைவர் எட்வின் காமராஜ் தலைமையில் விவசாயிகள், எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு வழங்கினர்.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் கால்நடை மருத்துவமனையில் விவசாயிகளுக்கு கன்று பராமரிப்புட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் ஜோசப் ராஜ், உதவி மருத்துவர்கள் அங்கப்பன், தமிழரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு 22 விவசாயிகளுக்கு கன்று பராமரிப்பு பெட்டகம் வழங்கி பேசினார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் சங்கர், மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் எடிசன், கருங்குளம் வட்டார காங்கிரஸ் தலைவர் புங்கன், கருங்குளம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் இசக்கி பாண்டியன், கருங்குளம் பஞ்சாயத்து தலைவர் உதயசங்கர், நடராஜன் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.