ரூ.73½ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்


ரூ.73½ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
x

கே.வி.குப்பத்தை அடுத்த பசுமாத்தூரில் நடந்த மனுநீதிநாள் முகாமில் ரூ.73½ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார்.

வேலூர்

நலத்திட்ட உதவி

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தை அடுத்த பசுமாத்தூரில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. உதவி கலெக்டர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். தனித்துணை கலெக்டர் தனஞ்செழியன், பல்வேறு துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ஹேமாவதி வரவேற்றார்.

முகைமை முன்னிட்டு 326 மனுக்கள் வரப்பெற்றன. அதில் 174 மனுக்கள் ஏற்கப்பட்டன. இவற்றில், முதல்-அமைச்சரின் விபத்து நிவாரண உதவித் தொகை, இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாற்றம், முதியோர் ஓய்வூதியம், கல்வி உதவித் தொகை, பண்ணைக்கருவிகள், சலவைப்பெட்டி, தையல் எந்திரம் என ரூ.73 லட்சத்து 65 ஆயிரத்து 750 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கலெக்டர் வழங்கினார்

கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் தாசில்தார் அ.கீதா, துணை தாசில்தார்கள் வடிவேலு, சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் த.கல்பனா, பெ.மனோகரன், ஒன்றியக் குழு தலைவர் லோ.ரவிச்சந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர் கே.சீதாராமன், வட்டார கல்வி அலுவலர் பா.சுமதி, வேளாண்மை உதவி இயக்குநர் வினித்மேக்தலின், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ர.மைதிலி, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முகாமில் இரும்புச்சத்து, வைட்டமின் சத்துக்களை ரசாயன முறையில் சேர்த்து அரைத்து, அரிசி வடிவில் தயார் செய்யப்பட்ட செறிவூட்டப்பட்ட அரிசியை பொதுமக்கள் பார்த்துச் சென்றனர்.


Next Story