தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
கமுதியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கமுதி,
கமுதியில், கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் அரசு மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் கடைநிலை ஊழியர்கள் 200 பேருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 5 கிலோ அரிசி மற்றும் 12 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.மேலும் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பழம், பிரட் மற்றும் நலத்திட்ட உதவிகளை கமுதி பேரூராட்சி தலைவர் அப்துல் வகாப் சகாராணி தலைமையில் ஒன்றிய செயலாளர் வடக்கு வாசுதேவன், தெற்கு மனோகரன் மத்தியம் சண்முகநாதன் ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், துணைத்தலைவர் சித்ராதேவி அய்யனார், பொதுக்குழு உறுப்பினர் பசும்பொன் தனிக்கோடி, கமுதி வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் பழக்கடை ஆதி, ஒன்றிய கவுன்சிலர்கள், முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலக பணியாளர்கள் சத்தியந்திரன், டோனி சார்லஸ், ரஞ்சித் மணிகண்டன், திம்மநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி, ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, புதுக்கோட்டை வாட்டர் போர்டு முத்துராமலிங்கம், நகர செயலாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.