வெளிமாநில தொழிலாளர்களுக்கு நலவாரிய அட்டை


வெளிமாநில தொழிலாளர்களுக்கு நலவாரிய அட்டை
x

புலம் பெயர்ந்து கட்டுமான பணி மேற்கொள்ளும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு நலவாரிய அட்டையை தொழிலாளர் உதவி ஆணையர் உமாமகேஸ்வரி வழங்கினார்.

தஞ்சாவூர்

வெளி மாநிலங்களில் இருந்து தற்போது புலம் பெயர்ந்து தமிழகத்தில் கட்டுமான தொழில் மேற்கொள்ளும் தொழிலாளர்களை, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்க்க சிறப்பு பதிவு முகாம் தஞ்சை மற்றும் கும்பகோணம் பகுதிகளில் நடைபெற்றது. இந்த முகாமில் 50-க்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்த வெளி மாநில கட்டுமான தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய நலத்திட்டங்கள் குறித்து தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) உமாமகேஸ்வரி விளக்கம் அளித்தார். இதை தொடர்ந்து அனைத்து ஆவணங்களும் சரியாக பெறப்பட்ட 12 கட்டுமானத் தொழிலாளர்கள் புதிய உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டு நலவாரிய அட்டை வழங்கப்பட்டது. முகாமில் தொழிலாளர் துறையை சார்ந்த பணியாளர்கள் கலந்துகொண்டனர். மேலும் நலவாரியத்தில் உறுப்பினராக இணைந்திட புலம் பெயர்ந்து தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர்கள் தங்களது விவரங்களுடன் தஞ்சை புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகத்தில் இயங்கி வரும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) அலுவலகத்தை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 04362-264549 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தொழிலாளர் உதவி ஆணையர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.


Next Story