நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா


நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
x
தினத்தந்தி 12 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-13T00:15:47+05:30)

பரமன்குறிச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

தூத்துக்குடி

உடன்குடி:

பொங்கல் பண்டிகையையொட்டி பரமன்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட தி.மு.க. நிர்வாகிகள், நலிந்தோர்கள் என 520 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலர் க.இளங்கோ தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ், உடன்குடி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ராமலட்சுமி, பரமன்குறிச்சி கூட்டுறவு கடன் சங்க துணைத்தலைவர் பூங்குமார், சங்க இயக்குனர் குமார், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. மாவட்ட பொருளாளர் வி.பி.ராமநாதன் கலந்து கொண்டு, 520 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


Next Story