காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் நலத்திட்ட பணிகள்


காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் நலத்திட்ட பணிகள்
x

காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் நலத்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் நலத்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர், மாற்றுத்திறனாளி நலத்துறை செயலர் ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதன்படி காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் தோணுகால் அரசு தொடக்கப்பள்ளியில் பயின்று வரும் பள்ளி மாணவர்களுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டு வரும் காலை உணவின் தரம் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தனர்.

தீபாவளி வாழ்த்து

காரியாபட்டியில் உள்ள சுரபி உண்டு, உறைவிடப் பள்ளியில் பயிலும் நரிக்குறவர் இன மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று, மாணவர்கள் மின்னணு தொலைக்காட்சி மூலம் கல்வி கற்பதை ஊக்கப்படுத்தும் வகையில், அந்த பள்ளிக்கு மின்னணு தொலைக்காட்சியினை வழங்கினர்.

மேலும் அங்கு பயிலும் 50 மாணவர்களுக்கு இனிப்புகள், புத்தாடைகள் வழங்கி அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த ஆய்வின்போது திட்ட இயக்குனர் திலகவதி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் தெய்வேந்திரன், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சங்கர் எஸ்.நாராயணன், வேளாண்மை இணை இயக்குனர் உத்தண்டராமன், துணை ஆட்சியர் (பயிற்சி) ஷாலினி, முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, செயற்பொறியாளர் சக்தி முருகன், கோட்டாட்சியர்கள் கல்யாணகுமார், அனிதா, மாவட்ட சமூக நல அலுவலர் இந்திரா, காரியாபட்டி தாசில்தார் விஜயலட்சுமி, சுரபி அறக்கட்டளை தலைவர் விக்டர் மற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story