நலத்திட்டங்கள் பிரசார வாகனம்


நலத்திட்டங்கள் பிரசார வாகனம்
x

நலத்திட்டங்கள் பிரசார வாகனம்

திருப்பூர்

திருப்பூர்

மத்திய, மாநில அரசுகள் மாற்றுத்திறனாளிகளுக்கு எண்ணற்ற நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. இதுகுறித்து மாற்றுத்திறனாளிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாகனம் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் மக்கள் கூடும் அனைத்து பகுதிகளுக்கும் சென்று கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி துண்டுபிரசுரம் வழங்கும் வகையில் இந்த பிரசார வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரசார வாகனத்தை கலெக்டர் வினீத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் முருகேசன் முன்னிலை வகித்தார். இந்த பிரசார வாகனம் மூலம் 'மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு வாசிப்பாளர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு மாத உதவித்தொகை, கல்லூரி படிப்பில் கல்வி கட்டணங்களுக்கு விலக்கு, மனவளர்ச்சி குன்றிய சிறுவர்களுக்கு ஆரம்ப கால பயிற்சி மையம், வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவித்தொைக உள்பட பல நலத்திட்டங்கள் குறித்து பிரசாரம் நடைபெறுகிறது. இந்த பிரசார வாகனம் கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி புறப்பட்டு சென்றது.


Next Story