ரூ.30½ லட்சம் நலத்திட்ட உதவிகள்


ரூ.30½ லட்சம் நலத்திட்ட உதவிகள்
x

திருவாரூரில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.30½ லட்சம் நலத்திட்ட உதவிகளை கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் வழங்கினார்.

திருவாரூர்

திருவாரூரில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.30½ லட்சம் நலத்திட்ட உதவிகளை கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆலுவலகத்தில் தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் சார்பில் நலத்திட்ட உதவிகள் நேற்று வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில்

அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில நல வாரியங்களில் 14,157 கட்டுமான தொழிலாளர்களும், 31,214 அமைப்பு சாரா தொழிலாளர்களும் பதிவு பெற்று உறுப்பினர்களாக உள்ளனர்.திருவாரூர் மாவட்டத்தில் 11 வகையான கட்டுமான தொழிலில் ஈடுப்பட்டுள்ள 556 உறுப்பினர்களுக்கு ரூ.11 லட்சத்து 89 ஆயிரம் மதிப்பிலான 13 வகையான சுய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகிறது. தற்போது 1206 பேருக்கு ரூ.30 லட்சத்து 56 ஆயிரத்து 434 மதிப்பிலான நலத்திட்டஉதவிகள் வழங்கப்படுகிறது. தமிழக அரசு தொழிலாளர்களின் நலன் காக்கும் சிறப்பான நலத்திட்டங்களை வழங்கி தொழிலாளர்களுக்கான அரசாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.30½ லட்சம்

நிகழ்ச்சியில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.30½ லட்சம் நலத்திட்ட உதவிகளை கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்குமார் வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய செயலாளர் செந்தில்குமாரி, தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையர் ஜெயபாலன், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாஸ்கரன், திருவாரூர் நகரசபை உறுப்பினர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

---



Next Story