சிறப்பாக பணியாற்றிய 74 போலீசாருக்கு பாராட்டு சான்று


சிறப்பாக பணியாற்றிய  74 போலீசாருக்கு பாராட்டு சான்று
x
தினத்தந்தி 24 Nov 2022 12:15 AM IST (Updated: 24 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 74 போலீசாருக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மாதம் தோறும் சிறப்பாக பணியாற்றும் போலீசாரை பாராட்டி பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 74 போலீசாரை பாராட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேற்று வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லயோலா இக்னேஷியஸ், தூத்துக்குடி ஊரக உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ், விளாத்திகுளம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.


Next Story