நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்றமீனவர், கடலில் தவறி விழுந்து பலி


நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்றமீனவர், கடலில் தவறி விழுந்து பலி
x
தினத்தந்தி 28 Jan 2023 12:15 AM IST (Updated: 28 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர், கடலில் தவறி விழுந்து பலியானாா்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர், கடலில் தவறி விழுந்து இறந்தார்.

மீனவர்

தூத்துக்குடி கோல்டன்புரத்தைச் சேர்ந்தவர் கிளைட்டன் (வயது 40). மீனவரான இவர் கடந்த 25-ந்தேதி மாலையில் நாட்டுப்படகில் சக மீனவர்களுடன் கடலில் மீன்பிடிக்க சென்றார்.

தூத்துக்குடி முயல்தீவு பகுதியில் சென்றபோது, கிளைட்டன் எதிர்பாராதவிதமாக நாட்டுப்படகில் இருந்து தவறி கடலில் விழுந்தார். உடனே சக மீனவர்கள் கடலில் குதித்து கிளைட்டனை தேடினர். ஆனாலும், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

உடல் மீட்பு

இதுகுறித்து தருவைகுளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசாரும் விரைந்து சென்று, கடலில் தவறி விழுந்து மாயமான கிளைட்டனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி முயல் தீவு பகுதியில் நேற்று காலையில் கிளைட்டன் உடல் பிணமாக மிதந்தது. அவரது உடலை மீனவர்கள் மீட்டுக்கு கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.

போலீசார் விசாரணை

தொடர்ந்து கிளைட்டனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தருவைகுளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story