குடிபோதையில் குளிக்க சென்ற தொழிலாளி ஆற்றில் மூழ்கி சாவு
குடிபோதையில் குளிக்க சென்ற தொழிலாளி ஆற்றில் மூழ்கி இறந்தாா்.
ஈரோடு
பவானி
சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா குட்டப்பாடி பகுதியை சேர்ந்தவர் விஜய் காளிதாஸ் (வயது 33). இவர் ஈரோடு மாவட்டம் பவானி வர்ணபுரத்தில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். மேலும் பவானி வரதநல்லூரில் உள்ள டீக்கடையில் இவர் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். விஜய்காளிதாசுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வரதநல்லூர் காவிரி ஆற்றுக்கு விஜய்காளிதாஸ் குடிபோதையில் குளிக்க சென்று உள்ளார். இதில் அவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்தும் பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விஜய்காளிதாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story