உடுமலை பகுதியில் தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்றி பயனடைய விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
உடுமலை பகுதியில் தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்றி பயனடைய விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
போடிப்பட்டி,
உடுமலை பகுதியில் தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்றி பயனடைய விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
உணவு உற்பத்தி
விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலை, கூலி ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒருசில பகுதிகளில் சிலர் விவசாயத்தைக் கைவிட்டு விடுகின்றனர்.மேலும் சில விவசாயிகள் மொத்தமுள்ள தங்கள் நிலத்தில் குறைந்த அளவிலான நிலத்தில் சாகுபடி மேற்கொண்டு மீதமுள்ள இடங்களை தரிசாக போடும் சூழல் ஏற்படுகிறது. நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகி வரும் நிலையில் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கென உயர் விளைச்சல் ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் சாகுபடிப் பரப்பை அதிகரித்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது.
எனவே சாகுபடிப் பரப்பை அதிகரிக்கும் வகையில் தரிசாக விடப்பட்ட நிலங்களைக் கண்டறிந்து அவற்றை மேம்படுத்தி மீண்டும் சாகுபடி நிலமாக மாற்ற வேளாண்மைத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.அந்தவகையில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலத்தை சாகுபடி நிலமாக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
உழவன் செயலி
இதுகுறித்து உடுமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தேவி கூறியதாவது'தொடர்ச்சியாக 2 ஆண்டுகளுக்கு மேல் சாகுபடி எதுவும் செய்யாமல் தரிசு நிலமாக விடப்பட்ட நிலங்கள் வைத்திருக்கும் விவசாயிகள் இந்த திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம். இந்த திட்டத்தில் 2.5 ஏக்கர் நிலத்தை மேம்படுத்தும் வகையில் புதர்களை அகற்ற ஒரு மணி நேரத்துக்கு ரூ. 660 என்ற வகையில் 20 மணி நேரத்துக்கு ரூ. 13 ஆயிரத்து 600 ஆகும்.
நிலங்களை சமன்படுத்த ஒரு மணி நேரத்துக்கு ரூ. 840 என்ற வகையில் 8 மணி நேரத்துக்கு ரூ. 6 ஆயிரத்து 720, சட்டிக்கலப்பை மூலம் உழவு செய்ய ஒரு மணி நேரத்துக்கு ரூ. 680 என்ற வகையில் 6 மணி நேரத்துக்கு ரூ.4080 செலவு பிடிக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் 15 கிலோ விதை, 2.5 கிலோ நுண்ணூட்டம், மருந்து தெளிக்க என ஒட்டு மொத்தமாக 2.5 ஏக்கருக்கு ரூ 27 ஆயிரம் செலவு கணக்கிடப்பட்டு அதில் 50 சதவீதம் பின்னேற்பு மானியமாக வழங்கப்பட உள்ளது.இந்த திட்டத்தில் இணைவதன் மூலம் விவசாயிகள் தங்கள் தரிசு நிலத்தை மேம்படுத்தி விளைநிலங்களாக மாற்றிக்கொள்ளலாம்.அத்துடன் தகுதியுள்ள விவசாயிகள் வேளாண்மைத்துறையின் மற்ற திட்டங்களிலும் இணைந்து கூடுதல் பலன் பெறலாம்.எனவே இந்த திட்டத்தில் இணைய விரும்பும் விவசாயிகள் உரிய ஆவணங்களுடன்உழவன் செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம்'என்று அவர் கூறினார்.
---
3 காலம்
ஆண்டியக்கவுண்டனூர் பகுதியில் தரிசு நிலத்தை மேம்படுத்தும் பணிகளை அதிகாரிகள் பார்வையிட்ட போது எடுத்த படம்.