ஒரு அமைச்சர் கைதானால் பின்பற்றப்படும் நடைமுறைகள் என்னென்ன..?


ஒரு அமைச்சர் கைதானால் பின்பற்றப்படும் நடைமுறைகள் என்னென்ன..?
x

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

சென்னை,

சென்னை, மதுவிலக்கு மற்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். கரூர் மற்றும் சென்னை வீடுகளில் நடந்த சோதனை நிறைவடைந்தது.

இன்று அதிகாலை சென்னை பசுமைவழிச்சாலை வீட்டிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக அழைத்துச் செல்வதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது அதனை தொடர்ந்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

இதற்கிடையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர். அவர் எந்த வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இதுவரை உறுதியான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், அமைச்சராக இருக்கும் ஒருவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தால், மேற்கொள்ளப்படும் நடைமுறை என்ன என்பதை பார்ப்போம்.

1) அமைச்சராக இருப்பவரை கைது செய்யும்போது ஆளுநரிடமும், எம்.எல்.ஏ. என்ற முறையில் சபாநாயகரிடமும் தெரிவிக்க வேண்டும்.

2 அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சரை கைது செய்தார்கள் என்றால், அதுகுறித்து சட்டப்பேரவை செயலகத்திற்கு தகவல் தெரியப்படுத்தப்படும்.

3. சட்டப்பேரவை செயலகம் மூலம் சபாநாயகருக்கு தெரியப்படுத்தப்படும்.

4. சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தால் உடனடியாக சட்டப்பேரவையில் தெரியப்படுத்தப்படும்.

5. சட்டப்பேரவை நடைபெறாத நிலையில், 5 நாட்களுக்குள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தப்படும்.

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது துறை வேறு யாரிடமும் ஒப்படைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


Next Story