மாடக்குளம் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன?-அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
மாடக்குளம் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை
மாடக்குளம் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மாடக்குளம் கண்மாய்
மதுரையை சேர்ந்த கார்மேகம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மதுரை மாடக்குளத்தில் 335 ஏக்கர் பரப்பளவில் மாடக்குளம் கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாய், சுற்றுவட்டார பகுதிகளின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. கண்மாயின் 3 மடைகளில் இருந்து தண்ணீர் வெளியேறும் பிரதான வாய்க்கால்கள், கிளை வாய்க்கால்கள் பராமரிப்பு இல்லாமல், ஆக்கிரமிப்பில் உள்ளன.
முதல் மடை வாய்க்கால் முற்றிலும் அழிக்கப்பட்டு, பிரதான சாலையக ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. எனவே வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக பொதுமக்களின் நலன் கருதி மாடக்குளம் கண்மாய் 3 மடை வாய்க்கால்களையும் அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றவும், முறையாக பராமரித்து வெள்ள அபாயத்தை தடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது இதுகுறித்து அரசு தரப்பில் எடுத்த நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.