சுண்டைக்காய் விலை என்ன? கீரை விலை என்ன? என்று கேட்டால் மட்டும் விலைவாசி குறைந்து விடுமா..? ப. சிதம்பரம் கேள்வி


சுண்டைக்காய் விலை என்ன? கீரை விலை என்ன? என்று கேட்டால் மட்டும் விலைவாசி குறைந்து விடுமா..? ப. சிதம்பரம் கேள்வி
x
தினத்தந்தி 10 Oct 2022 3:18 PM IST (Updated: 10 Oct 2022 3:19 PM IST)
t-max-icont-min-icon

சுண்டைக்காய் விலை என்ன? கீரை விலை என்ன? என்று கேட்டால் மட்டும் விலைவாசி உயர்வுக்கு தீர்வு கிடைக்காது என ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியை நிர்மலா சீதாராமனை விமர்சித்துள்ளார்.

கோவை,

சென்னை மயிலாப்பூரில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று காய்கறி வாங்கினார். நேற்று மாலை சென்னையிலிருந்து டெல்லி செல்வதற்காக விமான நிலையம் செல்லும் வழியில் மயிலாப்பூரில் தெருவோர கடையில் காய்கறி வாங்கினார்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ நிர்மலா சீதாராமனின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டது. சென்னை மயிலாப்பூர் மார்கெட்டில் நிதியமைச்சர் காய்கறி வாங்கினார். அங்கு அவர் காய்கறி வியாபாரிகளுடனும் உள்ளூர்வாசிகளுடனும் உரையாடினார் என்று அந்த வீடியோவில் கூறப்பட்டிருந்தது.

இந்தநிலையில், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே குட்டப்பாளைத்தில் உள்ள சிவசேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தை முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பார்வையிட்டார். தொடர்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சென்னை மயிலாப்பூரில் சென்று சுண்டைக்காய் விலை என்ன? கீரை விலை என்ன? என்று கேட்டால் மட்டும் விலைவாசி உயர்வுக்கு தீர்வு கிடைக்காது.

பொருளாதாரம் பற்றி எனக்கு தெரியாது என நகைச்சுவையாக பேசிய அவர், பணவீக்கத்தை கட்டுப்படுத்த அந்நாட்டு மைய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றது. ஜப்பான் நாட்டுடன் செய்த ஒப்பந்தப்படி டாலருக்கு நிகராக நமது ரூபாயை நிலையாக வைத்துக் கொள்ள ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

டாலரை கையிருப்பில் சீராக வைத்துக் கொள்ள ஸ்வாப் செய்யும் அளவுக்கு செல்ல வேண்டியது இல்லை. தற்போது கூட ரிசர்வ் வங்கியில் 500 பில்லியன் டாலர் அளவிற்கு கையிருப்பு உள்ளது.

ஆனால் கரன்சி ஸ்வாப் அளவுக்கு நாம் தள்ளப்பட மாட்டோம் இந்தியாவின் வளர்ச்சி 6.5 என உலக வங்கி கூறிய பிறகு அதை அரை மனதோடு மத்திய அரசு ஏற்றுக் கொள்கிறது. வளர்ச்சி குறைந்து விலைவாசி உயரும். அதை ரிசர்வ் வங்கி கவர்னரும் ஒப்புக்கொள்கிறார். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு பணவீக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் என்று அவர்களே ஒப்புக்கொள்கிறார்களே என்றார்.


Next Story