பிஎப் -7 வகை கொரோனா தொற்றை எதிர்கொள்ள அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன ? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்


பிஎப் -7  வகை கொரோனா தொற்றை எதிர்கொள்ள அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன ? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
x

பிஎப் -7 வகை கொரோனா தொற்றை எதிர்கொள்ள அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்னென்ன என்பதை குறித்து சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

கடந்த 20 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 10க்கும் கீழ் உள்ளது. நேற்று 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மருத்துவமனைகளில் மருந்து கையிருப்பு நிலவரத்தை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பான கட்டமைப்பை 2 நாளில் ஆய்வு செய்து உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 51-ஆக உள்ளது.

மருத்துவமனைகளில் உள்ள வசதிகளை 24 மணி நேரத்திற்குள் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா கட்டமைப்பை 2 நாட்களுக்குள் உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட மருத்துவ அதிகாரிகள் மருத்துவமனைகளில் சென்று நேரில் ஆய்வு செய்ய வேண்டும். மாதிரிகள் பகுப்பாய்வு செய்யும் வசதி தமிழகத்திலேயே உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story