மனு கொடுத்த உடனே மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கர சைக்கிள்
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுத்த உடனேயே மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கர சைக்கிளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுத்த உடனேயே மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கர சைக்கிளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.
குறைதீர்க்கும் கூட்டம்
தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். மொத்தம் 447 மனுக்கள் வரப்பட்டன. அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்து உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் கொட்டுமாரனஅள்ளி கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி முனுசாமி என்பவர் 3 சக்கர சைக்கிள் வேண்டுமென மனு கொடுத்தார். தொடர்ந்து, கலெக்டர் அந்த மனு மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் உடனடியாக அவருக்கு 3 சக்கர சைக்கிளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.
விளையாட்டு உபகரணம்
மேலும் வத்தல்மலை பால்சிலம்பு பழங்குடியின மக்கள் பயன்பாட்டிற்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் மாலா, கலால் உதவி ஆணையர் தணிகாசலம், சிறுபான்மையினர் நல அலுவலர் அய்யப்பன், முடநீக்கியல் நல அலுவலர் விஜயபாஸ்கர், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி உள்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.