மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் கிரிக்கெட்


மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் கிரிக்கெட்
x
தினத்தந்தி 9 Oct 2022 12:15 AM IST (Updated: 9 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் கிரிக்கெட் நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பாரா மையம், காரைக்குடி வீல்சேர் கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது. தொடக்க விழாவிற்கு அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி தலைமை தாங்கினார். பல்கலைக்கழக பதிவாளர் ராஜமோகன், உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவகங்கை, காரைக்குடி, தூத்துக்குடி, கோவை, வேலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அணிகள் கலந்துகொண்டு 12 ஓவர் கிரிக்கெட் போட்டியாக நடைபெற்றது. முதல் போட்டியில் காரைக்குடி-கோவை அணியும், சிவகங்கை-வேலூர் அணியும் மோதின. மாலையில் முதல் அரையிறுதி போட்டி நடைபெற்றது.

இன்று 2-வது நாளாக 2-வது அரையிறுதி போட்டியும், தொடர்ந்து இறுதி போட்டியும் நடைபெற உள்ளது. மாலை வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழாவும் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் முதல் அணிக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சார்பில் ரூ.22 ஆயிரத்து 1 வழங்கப்படுகிறது. 2-வது பரிசாக ரூ.17 ஆயிரத்து 1-ம், 3-வது பரிசாக ரூ.12 ஆயிரத்து 1-ம் வழங்கப்படுகிறது. மேலும் சிறந்த தொடர் மட்டை வீச்சாளருக்கு ரூ.3 ஆயிரமும், சிறந்த தொடர் பந்து வீச்சாளருக்கு ரூ.3 ஆயிரமும், இறுதிபோட்டியில் சிறந்த ஆட்டக்காரருக்கு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. மேலும் பரிசு கோப்பையும் வழங்கப்படுகிறது. போட்டிக்கான ஏற்பாடுகளை காரைக்குடி வீல்சேர் கிரிக்கெட் சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர்.


Next Story