எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோதுபல சோதனைகளை கடந்து அமைதியாக ஆட்சி நடந்தது;ஈரோட்டில் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பேச்சு


எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோதுபல சோதனைகளை கடந்து அமைதியாக ஆட்சி நடந்தது;ஈரோட்டில் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பேச்சு
x

எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது பல சோதனைகளை கடந்து அமைதியாக ஆட்சி நடந்தது என்று ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கூறினார்.

ஈரோடு

எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது பல சோதனைகளை கடந்து அமைதியாக ஆட்சி நடந்தது என்று ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கூறினார்.

அமைதியான ஆட்சி

ஒளிரும் ஈரோடு அமைப்பு சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரிடம் கோரிக்கை விளக்க கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைப்பின் தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ., தங்கமணி எம்.எல்.ஏ., மா.பா.பாண்டியராஜன் மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசும்போது கூறியதாவது:-

எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் ஈரோடு மாவட்டம் பிரிக்கப்பட்டு, ஜெயலலிதா ஆட்சியின்போது பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது பல சோதனைகளையும் கடந்து அமைதியாக ஆட்சி நடந்தது.

தி.மு.க. ஆட்சியில் ஒரு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. அமைச்சர் சு.முத்துசாமி அ.தி.மு.க.வில் இருந்தபோதுதான் பல திட்டங்களை செயல்படுத்தினார். தற்போது எந்த திட்டத்தையும் அவர் செயல்படுத்த முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

வணிக வளாகம்

முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசும்போது, "இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் ஆட்சியை பிடிக்க முடியாது. இருந்தாலும் தவறை தட்டி கேட்க முடியும். அ.தி.மு.க. ஆட்சியில் 8 ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆனால் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும் மின் கட்டணம், சொத்து வரி உயர்த்தப்பட்டது", என்றார்.

அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு பேசும்போது கூறியதாவது:-

நான் வெற்றி பெற்றால் என்னை எளிதாக சந்திக்க முடியும். மக்கள் சேவை செய்வதற்காக வந்துவிட்டோம் என்பதால், நீங்கள் கூப்பிட்டால் நானே நேரில் வந்து கோரிக்கையை நிறைவேற்றுவேன். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஈரோடு மாநகரில் ரூ.484 கோடி செலவில் ஊராட்சிக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலமாக சுகாதாரமான குடிநீர் பொதுமக்களுக்கு கிடைக்கிறது. ஈரோடு அரசு ஆஸ்பத்திரி சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்டு ரூ.61 கோடி செலவில் 9 மாடி கட்டிடம் கட்டப்படுகிறது.

ரூ.52 கோடி செலவில் கனிமார்க்கெட் கட்டிடம், ரூ.25 கோடியே 60 லட்சம் செலவில் காளைமாட்டு சிலை வணிக வளாகம், ரூ.42 கோடி செலவில் பஸ் நிலையம் விரிவாக்க பணிகள், ரூ.16 கோடி செலவில் சூரம்பட்டி நால்ரோடு வணிக வளாகம் ஆகியன கட்டப்பட்டு உள்ளன. எனவே எங்களுக்கு ஆதரவு கொடுத்தால் பல்வேறு திட்டங்கள் ஈரோட்டுக்கு கொண்டு வர முயற்சி எடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் விடியல் சேகர், எஸ்.டி.சந்திரசேகர், யுவராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story