மனு கொடுக்க வந்தபோதுவிஷ மாத்திரைகளை தின்று மயங்கி விழுந்த பெண்:தேனி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு


மனு கொடுக்க வந்தபோதுவிஷ மாத்திரைகளை தின்று மயங்கி விழுந்த பெண்:தேனி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 22 April 2023 12:15 AM IST (Updated: 22 April 2023 12:18 AM IST)
t-max-icont-min-icon

தேனி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தபோது விஷ மாத்திரைகளை தின்று பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி

தேனி அருகே உள்ள அல்லிநகரம் பகவதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பார்வதி (வயது 50). நேற்று இவர், தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பார்த்தனர். இதையடுத்து அவரை தூக்கியபோது கையில் விஷ மாத்திரைகள் இருந்தது. அவர் விஷம் மாத்திரைகளை தின்றது தெரியவந்தது.

பின்னர் போலீசார் அவரை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மனு கொடுக்க வந்த பெண் விஷ மாத்திரைகளை தின்று மயங்கி விழுந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story