கஞ்சாவை விற்பனை செய்ய பொட்டலம் போட்டு கொண்டிருந்த இளைர்களை கொத்தாக தூக்கிய போலீசார்


கஞ்சாவை விற்பனை செய்ய பொட்டலம் போட்டு கொண்டிருந்த இளைர்களை கொத்தாக தூக்கிய போலீசார்
x
தினத்தந்தி 9 Dec 2022 12:15 AM IST (Updated: 9 Dec 2022 9:38 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே கஞ்சா கடத்தி வந்து விற்பனைக்காக பொட்டலம் போட்டுக் கொண்டு இருந்த 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தேனி


கஞ்சா பறிமுதல்

தேனி அல்லிநகரம் பாண்டியன் நகரில் உள்ள முட்புதருக்குள் சிலர் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பொட்டலம் போட்டுக் கொண்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அல்லிநகரம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது அந்த புதருக்குள் 5 வாலிபர்கள் கஞ்சாவை பொட்டலம் போட்டுக் கொண்டு இருந்தனர். அங்கு 2 மோட்டார் சைக்கிள்களும் நிறுத்தப்பட்டு இருந்தன. அவர்களை போலீசார் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள்கள், கஞ்சா விற்பனை மூலம் கிடைத்த ரூ.14 ஆயிரத்து 200 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

5 பேர் கைது

விசாரணையில் அவர்கள், அல்லிநகரம் வெங்கலா கோவில் தெருவை சேர்ந்த கோபிநாத் (வயது 28), ராஜா என்ற கோழிராஜா (27), அம்பேத்கர் தெற்கு தெருவை சேர்ந்த குமார் (30), முத்துராஜ் (20), கணபதி நகரை சேர்ந்த மணிமுத்து (19) என்பது தெரியவந்தது. அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த கஞ்சாவை தேவாரத்தை சேர்ந்த பாண்டி, சுக்குவாடன்பட்டியை சேர்ந்த சாந்தாமணி, செல்வம் ஆகியோரிடம் வாங்கியதாகவும், அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்து பொட்டலம் போட்டுக் கொண்டு இருந்த போது சிக்கியதும் தெரியவந்தது. அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில், பாண்டி, சாந்தாமணி, செல்வம் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story