திருமணம் நடக்க இருந்த நிலையில் மணப்பெண் திடீர் மாயம்
ராமநத்தம் அருகே திருமணம் நடக்க இருந்த நிலையில் மணப்பெண் திடீர் மாயமானார்.
கடலூர்
ராமநத்தம்,
ராமநத்தம் அருகே உள்ள தி.ஏந்தல் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் இளமதி(வயது 26). எம்.ஏ. பி.எட் பட்டதாரியான இவருக்கும், தி.ஏந்தல் கிராமத்தை சேர்ந்த கருப்பன் மகன் வேல்முருகன் என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. இதனை தொடர்ந்து இவர்களது திருமணம் நேற்று முன்தினம் நடைபெற இருந்தது. இ்ந்த நிலையில் ஜாக்கெட் தைக்க செல்வதாக பெற்றேரிடம் கூறிவிட்டு சென்ற இளமதி, மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பல இடங்களில் தேடிப்பார்த்தும் இளமதி கிடைக்கவில்லை. இது குறித்து பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மணப்பெண் திடீரென மாயமானதால் திருமணமும் நின்றது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story