சென்னை மாநகரம் சிங்கப்பூராக மாறுவது எப்போது? பிரேமலதா விஜயகாந்த் கேள்வி


சென்னை மாநகரம் சிங்கப்பூராக மாறுவது எப்போது? பிரேமலதா விஜயகாந்த் கேள்வி
x

சென்னை மாநகரம் சிங்கப்பூராக மாறுவது எப்போது? பிரேமலதா விஜயகாந்த் கேள்வி.

சென்னை,

தே.மு.தி.க. கொடிநாளையொட்டி, கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்திலும், கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திலும் கட்சிக் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு சேலை மற்றும் இனிப்புகள் வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, "முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது, சென்னையை சிங்கப்பூராக மாற்றுவேன் என்றார். இன்றும் கூவம் ஓடும் சென்னையில் தான் நாம் வசிக்கிறோம். ஆட்சியாளர்கள் மக்களுக்கு நல்ல கல்வி வசதி, சாலை வசதி, சுத்தம் சுகாதாரமான நாடு, பெண்கள்- இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, சட்டம்-ஒழுங்கு சீரமைப்பு, டாஸ்மாக்கை ஒழிப்பது இப்படி பல்வேறு விஷயங்களை செய்ய வேண்டிய நிலையில், 81 கோடி ரூபாயில் பேனா நினைவு சின்னம் அமைக்கப்படுவதை எந்த மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்" என்றார்.


Next Story