முக்கோணம்-தளி சாலை அகலப்படுத்தப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


முக்கோணம்-தளி சாலை அகலப்படுத்தப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
x

முக்கோணம்-தளி சாலை அகலப்படுத்தப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

திருப்பூர்

தளி

முக்கோணம்-தளி சாலை அகலப்படுத்தப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

முக்கோணம் சாலை

உடுமலை-பழனி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முக்கோணம் சந்திப்பில் இருந்து சாலையூர், எரிசனம்பட்டி, தேவனூர்புதூர் வழியாக வேட்டைக்காரன்புதூர், ஆனைமலை பகுதிக்கும் வேலூர், வாளவாடி, தளி வழியாக திருமூர்த்தி மலை செல்வதற்கும் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலமாக சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் போக்குவரத்து வசதியை பெற்று வருகின்றனர். அதுமட்டுமின்றி கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருமூர்த்தி மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் முக்கோணம் சந்திப்பை அடைந்து வேலூர், வாளவாடி, தளி வழியாக செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது.ஆனால் சாலை குறுகலாக இருப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

அகலப்படுத்த வேண்டும்

பெருகி வருகின்ற மக்கள் தொகை மற்றும் வாகன போக்குவரத்திற்கு ஏற்றவாறு அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்தி விரிவுபடுத்த வேண்டியது அவசியமான ஒன்றாகும். ஆனால் ஒரு சில சேவைகள் இன்று வரையிலும் அதே நிலையில் நீடித்து வருகிறது. அதில் முக்கோணம்- தளி சாலையும் அடங்கும். இந்த சாலை கடந்த 50 ஆண்டுகாலமாக விரிவாக்கம் செய்யப்படாமல் உள்ளது. பஸ் மட்டும் செல்லும் அளவில் சாலை அமைக்கப்பட்டு உள்ளதால் எதிரே வரும் வாகனங்கள் ஒன்றுக்கொன்று விலகிச் செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.இதனால் அப்போது சிறுசிறு விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.

சாலையை விரிவாக்கம் செய்து தரக்கோரி மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே உடுமலை அருகே உள்ள முக்கோணம் சந்திப்பில் இருந்து வேலூர், வாளவாடி வழியாக தளி செல்லும் சாலையை அகலப்படுத்தி தருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.



Next Story